Showing posts with label Cinema. Show all posts
Showing posts with label Cinema. Show all posts

Friday, 31 May 2013

ஒரே படத்துக்கு 150 நாட்கள் கால்சீட் கொடுத்த தனுஷ்!

Dhanushs 150 days kalsheet in one film!
ஒரு படத்தை முப்பது நாட்களில் படமாக்கி முடித்த காலமும் இருந்தது. அப்படி 30 நாட்களில் படமாக்கப்படும் படங்கள் 100 நாள், 150 நாள் என்று வெற்றிகரமாக ஓடி சாதனையும செய்துவந்தன. அதோடு, 20 முதல் 30 லட்சம் பட்ஜெட்டில்தான் அந்த படங்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. ஆனால், இப்போது நிலைமையே வேறு, 50 கோடி, 100 கோடி பட்ஜெட்டெல்லாம் சாதாரணமாகி விட்டது. மேலும், நான்கு படங்கள் அளவுக்கு ஒரே படத்தை படமாக்குகிறார்கள். இதனால் குறைந்தது ஒரு வருடமாவது ஒரு படத்துக்கு எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அப்படி உருவாகும் படம் ஒரு வாரம்கூட தியேட்டரில் நிற்பதில்லை. இது இன்றைய காலம்.

இப்படிப்பட்ட காலகட்டத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்காக மொத்தம் 150 நாள் கால்சீட் கொடுத்துள்ளார் தனுஷ். மாற்றான் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்துக்குத்தான் இவ்வளவு சலுகையாம். இதைப்பற்றி தனுஷிடம் அவர் சொன்னபோது, அடேயபபா 150 நாளா? நான் இரண்டு படத்துக்கே இவ்வளவு கால்சீட் கொடுத்ததில்லையே என்று வாயை பிளந்தாராம். அதற்கு நான் எடுக்கப்போகும் படம் அப்படி. அதற்கு இவ்வளவு கால்சீட் கட்டாயம் வேண்டும் என்றாராம் கே.வி.ஆனந்த். அதோடு தனுஷின் வழக்கமான சம்பளத்தைவிட இப்படத்துக்காக அதிகமாக வாங்கிக்கொடுத்துள்ளாராம். அதன்பிறகு ஏன் வாயை திறக்கப்போகிறார் தனுஷ். படப்பிடிப்புக்கு எப்போ போலாம் என்று மட்டும்தான் கேட்டாராம்.
நன்றி:தினமலர்
Continue reading →

அமலா பாலின் பேஸ்புக் ரசிகர்கள்

amalapaul
பெரும்பாலான நடிகைகள், "நடிப்பதற்கே நேரம் போதவில்லை. இதற்கிடையே, எதற்கு பேஸ்புக், டுவிட்டர் என்று நினைக்கின்றனர். ஆனால், அமலா பால், "இன்றைய ‹ழலில், சமூக வலைத் தளங்களின் பயன்பாடு ரொம்பவும் அவசியம் என்கிறார். அவர் கூறுகையில், "ஒரு காலத்தில் ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர், நடிகைகளுக்கு கடிதம் எழுதினர். இப்போது, அதையெல்லாம் மறந்து விட்டு, எஸ்.எம்.எஸ்., இணையதளம் மூலமாக தொடர்பு கொள்கின்றனர்.அதனால் தான், என் ரசிகர்களுக்கு பதில் கொடுக்கவும், ரசிகர்களின் எண்ணிக்கையை பெருக்கவும், பேஸ்புக் பயன்படுத்துகிறேன் என்கிறார். தினமும் தன் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை, பேஸ்புக்கில் எழுதுகிறாராம். "இதன் காரணமாக, என்னைப் பற்றிய உண்மை தகவல்களை, ரசிகர்களுக்கு தெரியப்படுத்துவதால், மீடியாக்களில் பரவும் தப்பான செய்திகளையும், சரி செய்ய முடிகிறது என்கிறார்.
நன்றி:தினமலர்

Continue reading →

Thursday, 30 May 2013

விஸ்வரூபம் - தமிழில் எனக்கு கிடைத்த ஹாலிவுட்! ஆண்ட்ரியா

Vishwaroopam is tamil hollywood for me says Andrea
விஸ்வரூபம் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை வேகமாக படமாக்கி வருகிறார் கமல். முதல் பாகத்தின் முடிவில் இரண்டாம் பாகம் இந்தியாவில் என்று கார்டு போட்டு முடித்த கமல், இரண்டாம் பாகம் முழுக்க இந்தியாவில் நடப்பது போல் படமாக்கி வருகிறார். என்றாலும் அவர் எதிர்பார்த்தது போன்ற லொகேஷன்கள் இங்கு கிடைக்காததால் தற்போது தாய்லாந்தில் முகாமிட்டு படமாக்கி வருகிறார் கமல்.

அதோடு, முதல் பாகத்தில் பூஜாகுமாருக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் இந்த இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியாவுக்கு முக்கியத்தும் கொடுக்கிறாராம். அதனால் சில மாதங்களாகவே விஸ்வரூபம் படக்குழுவோடுதான் சுற்றிக்கொண்டிருக்கிறார் ஆண்ட்ரியா. கமல் சாருடன் நடிப்பதே கடினம். ஆனால் இந்த படத்தைப்பொறுத்தவரை கதாநாயகி ரேஞ்சுக்கு எனது கேரக்டர் பெரிதாகி உள்ளது என்று கூறியுள்ள ஆண்ட்ரியா, விஸ்வரூபம் படம் எனக்கு தமிழில் கிடைத்த ஒரு ஹாலிவுட் படம் என்கிறார். 

மேலும், இனிமேல் இப்படியொரு வாய்ப்பு எனக்கு கிடைக்குமோ கிடைக்காதோ. ஆனால், ஒரு மெகா படத்தில் கமல் சாருடன் நடித்து விட்ட திருப்தி எனக்கு இந்த படத்தில் கிடைத்து விடும் என்று சொல்லும் ஆண்ட்ரியா, எனது சினிமா கேரியரில் இது மிக முக்கியமான படம். அதற்காக கமல் சாருக்கு நான் வாழ்நாள் முழுக்க நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்கிறார்.
நன்றி:தினமலர்
Continue reading →

Wednesday, 29 May 2013

அப்பாவி ஆவி -மாசாணி திரைவிமர்சனம்

??????? ???
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாசாணியை (இனியா) காதலிக்கிறார், பணக்காரர் ராம்கி. குடும்ப கவுரவத்தை பெரிதாக நினைக்கும் ராம்கியின் அண்ணி ரோஜா, அவரை விஷம் வைத்து கொல்கிறார். ஊரும் உறவும் ஒதுக்கி வைக்க, கர்ப்பவதியான இனியா, ஊர் எல்லையில் குழந்தை பெற்று இறக்கிறார். அந்த குழந்தையை வளர்க்கிறார், ஊருக்கு சாமி சிலை செய்ய வந்த சிற்பி ஒய்.ஜி.மகேந்திரன். ஜாதிவெறி நிறைந்த அந்த ஊர் கோவிலுக்கு சிலை செதுக்காமல் திரும்புகிறார். மாசாணி ஆவியாகிவிடுகிறார். 

ஊரில் அவ்வப்போது அசம்பாவிதங்கள் நடக்க, பயந்துபோன மக்கள், 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒய்.ஜி.மகேந்திரனிடமே சாமி சிலை செய்ய கேட்கிறார்கள். அவர் தான் வளர்க்கும் மாசாணியின் மகன் அகிலை அனுப்பி வைக்கிறார். எந்த ஊரில் தன் தந்தை கொல்லப்பட்டு, தன் தாயை ஒதுக்கி வைத்து கொடுமைப்படுத்தினார்களோ, அதே ஊருக்கு சிலை செய்ய செல்கிறார் அகில். பிறகு என்ன என்பது கிளைமாக்ஸ். 

மாசாணியாக வரும் இனியாவின் அழகு கூடியிருக்கிறது. காணாமல் போன மோதிரத்தை சாணி பிள்ளையார் மூலம் கண்டுபிடிப்பது, தேங்காய் வைத்து நிலத்தடி நீரை அறிவது எல்லாம் பழைய காட்சிகளாக இருந்தாலும், அதை இனியா செய்வதால் ரசிக்க முடிகிறது. பிறகு கர்ப்பவதியாகி அவமானப்படுத்தப்பட்டு சிக்கி தவிக்கும்போது அனுதாபம் அள்ளுகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ராம்கி ரீ என்ட்ரி கொடுத்தாலும், கேரக்டர் என்னவோ பழசுதான். ஆனாலும் ஆள்இன்னும் அப்படியே இருக்கிறார். 

அகில், சிஜா ரோஸ் ஆரம்பத்தில் ‘கிராமத்து நாயகன்’, ‘அருக்காணி திலகம்’ என்று பட்டம் கொடுத்துக் கொள்வது சுவாரஸ்யம். ‘அவளை நினைச்சா தூக்கம் வரமாட்டேங்குது’ என்று இவர் சொல்கிறார். ‘என்னை உங்களுக்கு பிடிக்குதுல்ல’ என்று இவர் சொல்கிறார். ஆனால், இருவரும் காதலிப்பதாக ஒரு சீன் கூட இல்லை. கதையைச் சொல்வதா? இவர்களின் காதலைச் சொல்வதா என்பதில் தடுமாற்றம். ஹீரோவின் நண்பன் பிளாக் பாண்டி, உள்ளூர் மைனர் சிட்டிபாபு, கோவில் குருக்கள் மனோபாலா ஆகியோர் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். ரோஜா தாம்பாளத் தட்டை எட்டி உதைத்து, கார் கதவை வேகமாகத் திறந்து மூடி, ஸ்லோமோஷனில் நடந்து வந்து நடிக்கிறார். 

இசை அமைப்பாளர் பாசில் நம்பிக்கை வரவு. பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசையும் கதைக்கு இசைந்திருக்கிறது. ராஜகுருவின் ஒளிப்பதிவு கச்சிதம். ஆவி பழிவாங்கும் ஐடியாவெல்லாம் ரொம்ப ஓல்டு. மாசாணி பயமுறுத்தாத அப்பாவி ஆவி. 
நன்றி:தினமணி
Continue reading →

துள்ளி விளையாடு படத்தை பார்த்து வின்சென்ட் செல்வாவை பாராட்டிய விஜய்


Vijay praised director Vincent Selva
விஜய்யை வைத்து ப்ரியமுடன், யூத் போன்ற படங்களை இயக்கியவர் வின்சென்ட் செல்வா. இவர் இப்போது துள்ளி விளையாடு என்ற படத்தை இயக்கியுள்ளார். யுவராஜ், தீப்தி ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், பரோட்டோ சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தினை நடிகர் விஜய்க்கு பிரத்யேகமாக போட்டு காட்டினார் செல்வா. படத்தை பார்த்து விட்டு நடிகர் விஜய், வின்சென்ட் செல்வாவை மிகவும் பாராட்டியுள்ளார். புதுமுகங்கள் நடித்திருந்தாலும், சினிமாவில் ரொம்ப அனுபவம் வாய்ந்தவர்கள் போன்று நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் பிரகாஷ்ராஜுக்கும் அந்த மூன்று பேருக்கும் இடையே நடக்கும் டக் ஆஃப் வாரை ரசிகர்கள் நிச்சயம் விரும்புவார்கள் என்று கூறியுள்ளார். 
நன்றி:தினமலர்
Continue reading →

Tuesday, 5 March 2013

எந்த நட்சத்திர நடிகர் உண்மையான சமுக ஆர்வலர்?கருத்துக்கணிப்பு.








இவர்கள் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் மட்டுமல்ல இவர்களில் எந்த நட்சத்திர நடிகர் உண்மையான சமுக ஆர்வலர்?என்பதை வாக்களித்து உலகுக்குச் சொல்லுங்கள்.....   
1 எந்த நட்சத்திர நடிகர் உண்மையான சமுக ஆர்வலர்?கருத்துக்கணிப்பு.
Continue reading →

Monday, 4 March 2013

மதில் மேல் பூனை-ஒரு முன்னோட்டம்

  
பருவ வயதினர் படும் பாடு(அவஸ்த்தை) இளம் வயதினர் அனைவரும் வாழ்வில் சந்திக்கும் இடர்பாடுகள் பற்றியது.  
http://parithimuthurasan.blogspot.in/2013/03/mathilmelponai-trailer.html
மதில் மேல் பூனை-ஒரு முன்னோட்டம்
Continue reading →

Friday, 1 February 2013

ஒரு அவசர செய்தி.....,



உலக நாயகன் கமல்ஹாசன் ரசிகர்கள் பக்குவப்பட்டவர்கள் .கட்டுப்பாட்டோடு இருப்பவர்கள் என்பதற்கு பல உதாரணங்களைக்கூறலாம்.
இப்போது இசுலாமிய எதிர்ப்பு என்பதெல்லாம் தாண்டி விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதன் நோக்கம்  ஆளுங்கட்சியின் அரசியல் ,சொந்த வெறுப்பு,பழிவாங்கல் என்று தெரிந்தும் கட்டுப்பாட்டுடன் இருப்பது கண்டிப்பாக வரவேற்கப்படவேண்டிய விடயம்தான்.
இதோ நண்பர் கோவிந்தராஜூ பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள இரு வேண்டு கோள்கள்.
கமல்ஹாசன் ரசிகர்கள் அனைவரும் எத்தனை தடைகள் போட்டாலும் திரையரங்கில்தான் பார்ப்பேன்.திருட்டு விசிடி யில் பார்க்கமாட்டேன் என்று உறுதியுடன் இருந்தாலே  போதும். 


அது என்ன கரை என்பது புரியும்.ஆனால் திரையரங்கை தாக்க அக்கரை வேட்டியில் வர மாட்டார்கள் என்பதும்.இசுலாமிய வேடம்தரித்து வருவார்கள் என்பதும் புரியாதவர்களா நீங்கள்.?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அம்மாவின் அருள்வாக்கு,

இத்தனை நாட்களுக்குப்பிறகு நம்மை ஆளும் அம்மா வாயைத்திறந்துள்ளார்.பொதுவாக இது போன்ற பரபரப்புகளில் வாயை திறக்காமல் காரியத்தில் கண்ணாயிருக்கும் அவர் இப்போது அறிக்கை விடுகிறார் என்றால் தன்னையறியாமல் ஒரு அச்சத்துக்கு ஆளாயிருக்கிறார் என்றுதான் அர்த்தம்.
 இப்போதைய வழக்கும் தீர்ப்பு அரசுக்கு எதிராக வந்து விடும்.தனக்கு அது அவமானமாகி விடும் என்ற கவலைதான் வாயை திறக்க வைத்திருக்கிறது.
ஆனால் இத்தனை சிரமப்பட்டு இரவு 11.30 அரசு தடை வாங்க நீதிபதியின் தூக்கத்தை கெடுத்து மேல்முறையீடு செய்து தடை நீக்கத்துக்கு தடை வாங்க என்ன காரணம் என்று அறிக்கையில் சொல்லப்படவில்லையே?
இசுலாமிய தலைவர்கள் கூட "நாங்கள் கூறிய காட்சிகளை கமல் நீக்க ஒத்துக்கொண்டார்.முதலில் தடை சரி.பின் இரண்டாவது ஒடி சென்று இத்தனை அவசரப்பட்டு தடை வாங்க வெண்டிய அவசியம் அரசுக்கு என்ன வந்தது.சன்டைககாரர்கள் ஒத்துமையாக போனபின் இவர்கள் தடை செய்ய அலைவதுக்கும் எங்களுக்கும்    தொடர்பில்லை.எங்கள்   பிரச்னை முடிந்தது."என்கிறார்கள்.
இந்தியா முழுக்க படம் வெளியான பின் தமிழ் நாட்டில் மட்டும்,அதுவும் தமிழன் எடுத்த படத்தை வெளியிட தடை என்றால் அது தமிழக அரசுக்கும் அவர்கள் ஆட்சியில் வாழும் மக்களுக்கும்தான் அசிங்கம்.
ஒன்று மட்டும் வெளிப்படையாகத்தெரிகிறது.ஜெயலலிதா என்றஜெயா  தொலைக்காட்சியின் 
மறைமுக பங்குதாரருக்கும் கமல்ஹாசன் என்ற படத்தயாரிப்பாளருக்குமான பிரச்னைதான் மூல வேர்.
அல்லது இப்படிகூட மாற்றி யோசிக்கலாம்.
90 கொடிகளுக்கும் மேல் படத்தில் போட்டு விட்டு இத்தனை பணம் வருமா?என்று கவலைப்பட்ட கமல்ஹாசனுக்கு உதவவே இத்தடை நாடகமாக இருக்கலாம்.
இதன் மூலம் தமிழ் நாட்டிலுள்ள அனைவருக்குமே விஸ்வரூபத்தில் அப்படி என்னதான் இருக்கிறது அதையும் பார்த்து வைப்போம் என்று திரையரங்குக்கு வர ஆவலைத்தூண்டிவிட்டார்கள் அல்லவா?
கையை பிசைந்து நின்ற கமலுக்கு அரசு செய்த இலவச விளம்பரம்.
அதனால்தான் "தடையால் நட்டம் என்று பணம் அரசிடம் கேட்கக்கூடாது"என்று அம்மையார் வரிகளை சேர்த்திருப்பாரோ?  
கமல் தனக்கு எதிரி அல்ல என்று ஜெயா கூறியதை நம்ப இயலாது. 
அன்பத்தேடி படத்தில் புத்தர் வேட கமலை ஜெயலலிதா மயக்கி ஆடும் காட்சியிலேயே கமலின் நடிப்பை விமர்சித்து திரை உலகில் அடையாளம் தெரியாத  ஆளாக இருந்த கமலை வாங்கு வாங்கு என்று வாங்கியவர்.
அதன் பின் மூன்றாம் பிறை யில் கமல் தேசிய விருது பெற்றமைக்காக எம்ஜிஆர்  பாராட்டு விழாவை நடத்தக்கூடாது என்று எம்ஜிஆரிடம் சண்டையிட்டவர் இதே ஜெயலலிதா.அதன் பின் விக்ரம் பட விளம்பர விவகாராம்,இப்போது சிதம்பரம் கூட்ட பேச்சு,ஜெயா டிவிக்கு அடிமாட்டு விலைக்கு கொடுக்காமல் விஸ்வருபத்தை நல்ல விலைக்கு அடுத்த தொலைக்காட்சிக்கு விற்றது என்று  பல உள்குத்துக்கள் உள்ளன.
அதை எல்லவற்றையும் விட தடை விதிக்கப்பட்டவுடன் ஜெயலலிதாவை சந்தித்து கூழைக்கும்பிடு போடாமல் இருந்தது அவருக்கு தடையை நீக்க முடியாமல் சட்டம் ஒழங்கு பிரச்னை வந்து விட்டது. 
அட அப்போது கூட சந்திக்காமல் இருந்தது சரி.தடையை நீக்கும் உத்திரவுக்கு பின்னால் ,இசுலாமியருடன்  சுமுகமாக பேசி தீர்வு காண நீதிபதி சொன்னபோது கமல் இசுலாமியர்களுடன் பேசி சில காட்சிகளை நீக்க ஒப்புக்கொண்டதும் -அவர் வருவார் என்றும் அப்போது அம்மாவை பாருங்கள் அம்மா பெருந்தன்மையுடன் மன்னித்து விடலாம் என்று 
 கூற தலைமைச்செயலர்,உள்துறை செயலர் என்ற அதிகார மட்டங்கள் காத்திருந்த போது கமல் வராமல் பிரச்னையை இசுலாமியருடன் முடித்துக்கொண்டதும் தான் அம்மா விஸ்வரூப ம் எடுத்துஇரவு நீதிபதி வீட்டை  11.30 க்கு தட்ட வைத்து விட்டது.
அதுவும் போதாது என்று காவல்துறைக்கு எந்த  திரையரங்கிலும் தடை நீக்கம் என்று படத்தை போட்டு விடக்கூடாது.மதியம் மீண்டும் தடையை எப்படியும் வாங்கி விடுவோம் என்ற ஆணை பறந்து அதன் படியே ஏவல் மன்னிக்கவும் காவல்துறை படத்தை நிறுத்தி ரசிகர்களை அடித்து விரட்டியது.
அது போதாது என சிலரை எற்பாடு செய்து கமல் விளம்பர பதாதைகளை எரிக்க செய்தது.திரையரங்குகளை கல்லை எரியச்செய்தது.
 இதன் மூலம்  சட்டம்-ஒழங்கை நீதிமன்றத்தில் காட்டி அரசின் வாதத்தை வலுப்பெறச்செய்யலாம் என்பதுதான் ஆளுங்கட்சியின் தலைமையின் திட்டம் .
அரசு அல்லது ஆளுங்கட்சிதான் செய்தது என்பதற்கு ஆதாரம் பல.
சென்னை தேவி திரையரங்கில் இருந்து ரசிகர்கள்  ஆயிரக்கணக்கானோர் காவல்துறையால் வெளியேற்றப்பட்டு வாயில் கள்  பூட்டி காவல்துறையினர் நின்று கொண்டனர்.வெளியே ரசிகர்கள் கூட்டம்.ஆனால் உள்ளே கமல் பேனர்கள் தீப்பிடித்து எரிகிறது.காவல்துறையினர் அதை அப்புற ப்படுத்துகின்றனர்.யாரோ பெட்ரோல் குண்டை வைத்து எரித்து விட்டு ஒடி விட்டனராம். மு.தா.அறிக்கை பதிவு செய்து விட்டு செய்தியாளர்கள் வரும் முன் எதுவும் நடக்காதது போல் சுத்தமாக துடைத்து விட்டு ஒன்றும் இல்லையே என்று சொல்லியிருக்கிறது காவல்துறை.ஆனாலும் சுவரில் உள்ள கரியை படம் பிடித்து திரும்பியுள்ளனர் செய்தியாளர்கள்.இசுலாமிய மக்கள் மீது தானே இக்குற்றசாட்டு விழுகிறது?

அடுத்து வாங்க பழகலாம் ரினாஷ் கான் தன்பதிவில் எழுதிய சம்பவம் .

இதுவும் தமிழ் நாட்டில் பதட்டத்தை ஏற்படுத்திய விவகாரம்.இந்த பழியும் ஒன்றுமறியா இசுலாமியர் மீதுதான் விழுந்திருக்கும்.ஆனால் பூனை வெளியெ வந்து பிசுபிசுத்து விட்டது.

"[flash news ] என்ன வென்றால் கோவையில் முஸ்லிம் மக்கள் அதிக வாழும் இடங்களில் கோவை கரும்புக்கடை .ஆசாத் நகரில்   ..சில மர்ம நபர்களால் பதிக்குவைக்கப்பட்ட  பெட்ரோல் குண்டு ..கண்டு பிடிக்க பட்டது ...இந்த பெட்ரோல் குண்டு எதற்க்காக  பதிக்கு வைக்கப்பட்டது ..யார் பதிக்கு வைத்தார்கள் ..விஸ்வரூபம் படத்தை திரையிடாமல் தடுக்க சில மர்ம நபர்களால் பதிக்க வைக்க பட்டதா ??? என்று போலீசார் ..விசாரணை செய்து கொண்டு வருகிறார்கள் ......
 என்ற செய்தி வளம் வந்து கொண்டு இருந்தது ..இதை கண்டு நான் பெரிதும் வறுத்த பட்டேன் ..ஏன் என்றால் ..நானும் கோயம்புத்தூர் காரன் தான் அதுவும் நான் வசிப்பதும் கரும்புகடையில் தான் .....எனக்குள்ளே என் சமூதாயம் மக்களின் மேல் கோவம் வந்தது ஏன் என்றால் எதற்காக நம் மக்கள் இப்படி பெட்ரோல் குண்டுகளை எல்லாம் வைத்து இருப்பதனால்தானே ..மாற்று மத சகோதரர்கள் நம்மை தீவிரவாதி என்று எண்ணி கொண்டு இருக்கிறாகள் ..இதனால் இந்த பெட்ரோல் குண்டுகளினால் அவை  உறுதி செய்ய படுமே   என்று ..வருத்தப்பட்டேன் ...ஆனால் 
இன்று காலையில் நான் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக ரெடி ஆகி கொண்டு இருந்தேன் ..உடனே என் தந்தை வந்து ஒரு செய்தி சொன்னார்கள் அது என்ன வென்றால் 

நேற்று போலீசார் ..கரும்புகடைக்கு வந்ததாகவும் .. அங்கே   ஆசாத் நகரில் அன்வர் என்ற நபர் கரி [இறைச்சி ]கடை  நடத்தி வருகிறார்  ..அந்த கடைக்கு அருகில் ஒரு காலி குடோன் இருந்தது ..அதை சாதகமாகா பயன் படுத்தியே போலீசார் .இந்த அன்வரை ..தனியாகா அழைத்து அந்த குடோனில் ..பெட்ரோல் குண்டு இருந்ததாகா அதை அன்வர் பார்த்து போலீசாரிடம் ..கூறியதாகவும்...உடனே வந்த போலீசார் அந்த பெட்ரோல் குண்டை .பறிமுதல் செய்து ..அந்த அன்வரை சாட்சியாகா ..அவரிடம் இருந்து கை எழுத்து வாங்கி கொண்டு வந்ததாகவும் .....ஒரு பொய்யான தகவலை போலீசார் நேற்று செய்து ..இருக்கிறார்கள்....
அன்வர் அவர்களும் போலிசார் சொல்லும் பொழுது பயந்து கொண்டு ..ஆம் நான் அந்த பெட்ரோல் குண்டை பார்த்தேன் என்று கை எழுத்து போட்டு குடுத்து விட்டார் ..ஆனால்  அவரின் மனசு அந்த பொய்யான தகவல்களுக்கு இடம் கொடுக்க வில்லை உடனே அவர் .அங்கே உள்ள ஜமாத்திடம் வந்து நடந்த உண்மையை சொல்லி விட்டார் ..இந்த செய்தியால் எங்கள் ஏரியாவில் ஒரே பரபரப்பு ......

மக்களிடம்...ஒற்றுமைக்ககா பாடு படும் அரசு ..இப்படி மக்களின் நடுவே பிளவை ஏற்படுத்தி .ஒருவருக்கொருவர் சண்டைஏற்படுத்த  பித்தனா  பண்ணி கொண்டு இருக்கிறது....இதனால் எனக்கு அமைதி படை படம் பார்த்த நியாபகம் தான் வருகிறது அந்த படத்தில் ...சத்யராஜ் மக்களின் ஓட்டுக்காக ..கீழ் சாதிக்கும் மேல் சாதிக்கும் சண்டையை ஏற்படுத்தி விட்டு ..அதை சிரித்த படி வேடிக்கை பார்ப்பார் ..சத்யராஜ்... பின்பு எல்லோரும் அடித்து சாகும் பொழுது ..சமாதானம் பேசுவது போல் ..வந்து தடுத்து நிறுத்துவார் .. ..."
 


Continue reading →

Tuesday, 2 October 2012

அலி ஜி- இண்டா ஹவுஸ்


சேச்சா பேரான் கோஹேன் இவர் நடித்து கதை திரைகதை அமைத்து இயக்கிய இந்த படம் 2006இல் ரிலீஸ் ஆகி செம ஹிட் ஆனது. இந்த படம் ஐரோப்பா நாடுகளில் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட்டது. காரணம் இவரது முந்தய படமான போராட் படத்தின் காட்சி அமைப்பு அதை ஆசியா நாட்டில் ரிலீஸ் செய்ய விடாமல் செய்துவிட்டது.   http://eththanam.blogspot.in/2012/10/blog-post.html
Continue reading →

Saturday, 22 September 2012

சினிமா பிரபலமானால் இதைக்கூட விற்கலாமுங்கோ. கறுமம் கறுமம்...........

அண்மையில் விஜய் டிவியில் சிநேகா-பிரசன்னா திருமண வீடியோவை விற்று காசு பார்த்தது அதன்பின் ஆடிமாதத்தில் கணவன் மனைவி சேரக்கூடாது என்ற தமிழர்களின் நம்பிக்கையை போன் விளம்பரத்துக்காக பயன்படுத்தி சிநேகா-பிரசன்னா ஜோடி காசு பார்த்தது தமிழ் டிவி ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

அதே போன்று  hollywood பிரபலம் ஒன்று இன்னொன்றை விற்று பணம் சம்பாதித்துள்ளது.

அது என்ன கறுமம் என்று இந்த லிங்கில் சென்று பாருங்களேன்.
Continue reading →

ஆண்சமூகத்திடம் மன்னிப்புகேட்ட hollywood பிரபலம்

தனது ஆண் நண்பரிடம் நடாத்திய, ஆண் சமுதாயத்தை இழிவுபடுத்தும் உரையாடல் வெளியானதால் பலத்த தர்மசங்கடங்களை எதிர்கொண்ட hollywood பிரபலம் ஒன்று ஒட்டுமொத்த ஆண்சமூகத்திடமும் பகீரங்க மன்னிப்பு  கோரி நிலைமையை சமாளித்துள்ளது.அந்த பிரபலம் வேறுமல்ல அடிக்கடி ஆண்களுடன் சுற்றித்திரிந்து கிசுகிசுக்களால் பிரபலமான Paris Hilton ஏ ஆவார்.

இந்த உரையாடல் இவரது வாகன சாரதியால் இரகசியமாக பதிவு செய்து வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Continue reading →

Friday, 31 August 2012

முகமூடி - திரை விமர்சனம்


ஜீவா, நரேன், பூஜா ஹெட்கே, நாசர் ஆகியோர் நடித்த இத்திரைப்படத்தை மிஸ்கின் இயக்கியுள்ளார். யூ டிவி நிறுவனம் தயாரித்துள்ளது.
Martial Arts கலையை பயன்படுத்தி எடுத்துள்ளதாக பெரியஅளவில் விளம்பரம் செய்து வந்தார் இயக்குனர் மிஸ்கின். அதுமட்டுமல்லாது சூப்பர் ஹீரோ திரைப்படம் என்று வேறு சகட்டு மேனிக்கு அல்லிதேளித்தார். கடைசியில் படம் பே பே.http://eththanam.blogspot.in/2012/08/blog-post.html
Continue reading →

Sunday, 27 May 2012

இஷ்டம்@விமர்சனத்துக்கு விமர்சனம்

http://duraigowtham.blogspot.com/2012/05/blog-post_7895.html

இஷ்டம்@விமர்சனத்துக்கு விமர்சனம்


நடிகர்: விமல்

இந்த படத்த பத்தி பாக்குறதுக்கு முன்னாடி, இந்த படத்துக்கு வந்துருக்கற ஒருவிமர்சனத்தப் பத்தி பாப்போம்…….
--
Thanks & Regards,

SENTHIL KUMAR SUNDHARARAJAN

Continue reading →

உறுமி - தெளியவைக்கும்

இந்த வாரம் திடீரென்று எந்த விளம்பரமும் இல்லாமல்  ரிலீஸ்    ஆகிவிட , நேற்று இஷ்டம் படம் போகலாம் என்று அதன் விமர்சனங்களை படிக்க நெட்டை நோண்டினேன். அப்போத்துதான் தெரிந்தது இது வெளியான விஷயம். இஷ்டம் விமரசனங்களும் ரசிக்கும்படி இல்லாததால் கமலாவில் இதை புக் செய்தேன்.  சனிநீரடு என்று ஔவையாரே சொல்லியுள்ள காரணத்தினால், படத்திற்கு செல்வதற்கு முன் அருகில் உள்ள பாரில் சிறிது நீராடிவிட்டு செல்ல முடிவெடுத்தோம்.


http://sathivenkat.blogspot.in/2012/05/blog-post.html
Continue reading →

உலக நாயகனின் உண்மையான facebook account இதுதான்

கமல்ஹாச‌ன் பெயரில் முகநூலில் பல கணக்குகள் இருப்ப‍தால், கமலின் உண் மையான முகநூல் கணக்கு எது என்பது  தெரியாமல் ரசிகர்கள் பெரிய குழப்பத்தில் இருந்துவருவதை அறிந்த கமல், பேஸ்புக்கில் தனது பெயரில் புதியதாக கணக்கு ஒன்றை ஸ்தாபிதம் செய்து ,பின்வருமாறு கூறுகிறார் .     
Continue reading →

இனையத்தில் விபச்சாரியாக வலம் வரும் இளம் நடிகை

http://www.news2world.com/2012/05/blog-post_9366.html
இனையத்தில் விபச்சாரியாக வலம் வரும் இளம் நடிகை
Continue reading →

Saturday, 26 May 2012

உருமி@உருமி

http://duraigowtham.blogspot.com/2012/05/blog-post_26.html

உருமி@உருமி


நடிகர்கள்: பிரித்விராஜ், பிரபுதேவா, ஆர்யா, ஜெனிலியா, வித்யா பாலன், நித்யாமேனன்……….மற்றும்…………..அது இருக்கும் ஒரு 1000 குலோவோ இல்ல 2000குலோவோ…….
இயக்கம்: சந்தோஷ் சிவன்
தயாரிப்பு: சந்தோஷ் சிவன் & பிரித்விராஜ் & ஷாஜி
--
Thanks & Regards,

SENTHIL KUMAR SUNDHARARAJAN

Continue reading →

ஆர்யாவுடன் காதலில் விழுந்தார் நயந்தாரா:ஆர்யா பதில்!! Nihla Sama

2 வருடங்களாக உயிருக்குயிராக பிரபுதேவாவைக் காதலித்து வந்தார் நயந்தாரா. ஆனால் இருவருக்கும் 
Continue reading →

நடிகை தமன்னாவின் புதிய கவர்ச்சி படங்கள்

http://www.news2world.com/2012/05/tamanna-in-black-dress-photo-gallery.html நடிகை தமன்னாவின் புதிய கவர்ச்சி படங்கள்
Continue reading →

சகுனி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்



சகுனி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் .... Seen More...
--
அன்புடன்
Namakkal4u Team.

http://namakkal4u.com/
http://cinema.namakkal4u.com/

Continue reading →



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog